ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,250 முதல் 1,100 வரை குறைக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள் மத்தியில் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.