உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சிவில் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குழுவின் பிரதிநிதிகள் நியமனம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செனல் 4 வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளளார்.
இந்த குழுவுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.