”இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும்” எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் Trafalgar Square பகுதியில் அண்மையில் புலம்பெயர் தமிழர்களால் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீரப்புப் போராட்டத்தின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் பெருமளவான தமிழ் புலம்பெயர் மக்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















