மொரோக்கோவில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,122 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சுமார் 1,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர்மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், வீடு மற்றும் உடைமைகளை இழந்துள்ளதால் இரவு நேரத்தில் வீதியில் உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.