மனித வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாது உலகின் பல வல்லரசு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று அமெரிக்கா முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
அல் கொய்தாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில் வெளிநாட்டினர் உட்பட 2,996 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 25,000 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதல்களால் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.