ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கட்சித் தலைமையகத்தில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜெயசேகரவை நீக்கியது மற்றும் அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தது குறித்து மத்திய குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர பொருத்தமானவர் என கருதப்பட்டால் எதிர்காலத்தில் கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 05 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டார் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடிதம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகரவுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.