அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை அமுல்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அது சர்வதேச தரத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும் அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் சமூகங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி, கடந்த காலத்தை கையாள்வதில் போதுமான ஆதாரம், சுதந்திரம் மற்றும் வெளிப்படையான அணுகுமுறையின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என்றும் நிலைமாறுகால நீதியில் முன்னேற்றம் காண்பதற்கான அர்ப்பணிப்புகளை ஈறுகொள்வதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது,
மேலும் எந்தவொரு செயல்முறையும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைக் கொண்டிருப்பதையும், கடந்தகால பரிந்துரைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுவதையும், சர்வதேச தரங்களுக்கு இணங்குவதையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.