இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று காலை சனநெரிசல் மிக்க புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு 84 புகையிரத ஊழியர்களே நேரடிப் பொறுப்பு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏறக்குறைய 18,000 தொழிலாளர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் அல்லது சுயநல நோக்கங்களுக்காக 84 ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.