ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்ற அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு இன்று புவனேக அலுவிஹாரே, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், அமைச்சருக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்திருந்தார்.