இந்திய பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ரஷ்யாவிடம் இதற்குமுன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை ஆனால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த மெர்சிடிஸ், அவுடி கார்களை விட அவை மிகவும் சிறப்பானவையாக இருக்கும்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஓட்டோ மொபைல்களைப் பயன்படுத்த வேண்டும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா ஏற்கனவே இதற்கான முன்மாதிரிகளை அமைத்துள்ளன. உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையை கொண்டுவந்த பிரதமர் மோடி, அவற்றை வாங்கவும் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். ஆகவே வாகன உற்பத்தியாளர் பிரதமர் மோடியின் கொள்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரித்துள்ளார்.