வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபிய நகரமான டெர்னாவில் தற்போது கண்ணிவெடிகள் காரணமாக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சுத்தமான தண்ணீரைத் தேடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
லிபியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதனால் 11,300 பேர் உயிரிழந்துள்ள அதேநேரம் 10,000 பேர் காணவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சடலங்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.