கலவரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதை விட குறித்த பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுக்கு இழப்பீடு வழங்குதல் என்னுடைய துக்கம் சந்தோசம் குறித்து பிரச்சினை இல்லை.
அன்று அவ்வாறு நடந்துக் கொண்டது சரியா பிழையா என்பது பற்றியே பேச வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு இடமளிக்க முடியுமா?
தீ வைத்தது சரியா? அமரகீர்த்தியை கொலை செய்தது சரியா? அதனை தான் கேட்க வேண்டும் இழப்பீடு அல்ல.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவரின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியது சரியா? எல்லாமே பிழைதான்.
87, 89 களில் அப்பாவி மக்களை கொன்றது சரியா? அவைகள் பிழை என்றால் காலிமுகத்திடல் தாக்குதலும் பிழைதான்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.