30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருட்களை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
34 வயதுடைய கென்ய நாட்டு பிரஜையொருவரினாலேயே இந்தப் போதைப்பொருள் நாட்டுக்குள் கடத்திவரப்பட்டுள்ளது.
30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப் பொருட்கள், எத்தியோப்பியாவிலிருந்து நாட்டுக்கு கடத்திவரப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் நேற்று அவற்றை கைப்பறியுள்ளனர்.
இந்த போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்திய 34 வயதுடைய கென்ய நாட்டுப் பிரஜையொருவரும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், மோட்டார் வாகன வியாபாரியென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எத்தியோப்பியாவின் அடிஸ்அபாபா நகரிலிருந்து, கட்டார் தலைநகர் டோஹாவிற்கு சென்று, அங்கிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான ஞசு 654 எனும் விமானத்திலேயே நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பாக சந்தேகம் கொண்டு, அவர் கொண்டுவந்த கைப்பையை பரிசோதனை செய்து பார்த்தபோது, 3 பிஸ்கட் டின்களின் சூட்சமமான முறையில் கடத்திவரப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை சுமார் 4 கிலோ எடைக் கொண்டது என்றும் 180 வில்லைகளில் இவை அடைத்துவரப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நாட்டுக்குள் வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.