கொள்ளுப்பிட்டியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், கடலோர ரயில் மாற்றகத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த ரயில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கும் கோட்டை ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளதால் ரயில் போக்குவரத்து ஒரு திசையில் மட்டுமே இயக்கப்படுகிறது.
ரயில் சேவைகளை விரைவாக மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.