அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண்ணொருவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ள நிலையில், அங்கு சென்ற பொலிஸார் குறித்த வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கிருந்த குளிர் சாதனப் பெட்டியில் 5 நாய்களின் சடலங்கள் இருந்துள்ளதோடு, மேலும் 55 நாய்கள் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நாய்களை மீட்ட பொலிஸார் அவற்றை விலங்குகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளதோடு, அவ்வீட்டின் உரிமையாளரான மெக்லாலின் என்ற பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
















