இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லியில் பதுங்கியிருந்த இவர்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 17 ஆம் திகதி இரவு புனேவில் உள்ள கோத்ருட் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருட முயன்றபோது ஷாநவாஸ் என்ற குறித்த ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைக்காக அவரது மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில் வட இந்தியாவில் பயங்கரவாதச் சம்பவங்களை நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தில் ஷாநவாஸ் உட்பட மூன்று பேர் டெல்லி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.