சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் அவசியம் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள 100 நிபந்தனைகளில் 38 நிபந்தனைகளே தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
43 நிபந்தனைகள் இன்னும் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்றும் மீதமுள்ள நிபந்தனைகள் ஓரளவு மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாவது தவணை நிதியைப் பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்றும் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.