பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இவ் வழக்கு குறித்த விசாரணைகள் பாகிஸ்தானின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இம்ரான்கான் ஏற்கனவே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



















