நைஜீரியாவில் கடந்த 29 ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலமொன்றில் கலந்துகொண்டவர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு மாகாணமான ஒட்டோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது சுமார் 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடத்திச் சென்றவர்கள் யார்? எதற்காக இவ்வாறு செய்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.