அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி(Kevin McCarthy) அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியைத் தழுவியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு பதவி நீக்கப்படுவது இதுவே முதல் முறை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.