சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகி எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த வருடாந்த மாநாட்டின் ஊடாக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை இலங்கை மேலும் வெளிப்படுத்தலாம் என ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் என தாம் நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.