இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில் சீன எல்லைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது நடத்தப்பட்ட பீரங்கித்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
KIO ( Kachin Independence Organisation) என்ற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இராணுவ அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் குறித்த குழுவுக்கு பொது மக்களின் ஆதரவு காணப்படுகின்றன.
இதேவேளை மியன்மார் இராணுவமும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, எதிர்க்கட்சி மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.