கடந்த 2 ஆம் திகதியன்று பேக்கரி ஒன்றில் மாலு பணிஸ் ஒன்றை உட்கொண்ட 15 வயதுடைய மாணவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து, நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை எதிர்பார்ப்பதாக எல்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பி.டபிள்யூ.எல்.எஸ் சந்தகென் வடுகே குறிப்பிட்டுள்ளளார்.
சடலத்தின் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கான அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கும் பல ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நாள், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டடுள்ளது.
இந்நிலையில் சிகிச்சைகள் பலனின்றி மாணவன் உயரிழிந்ததை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.