இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றதுடன், மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (ஐழுசுயு) அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர், இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.