இலங்கை – அவுஸ்ரேலியா வர்த்தக மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு ஒப்பந்தத்தை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சிறு தொழில் முனைவோர் சந்தையில் நுழைய வழிவகை செய்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.