ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுற்றாடல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது
அரசியலமைப்பின் 44/3ஆம் பிரிவின் அடிப்படையில், பிரதமரின் ஆலோசனை அடிப்படையில், குறித்த சுற்றாடல் அமைச்சு, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இரத்து செய்யப்பட்டமை சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதன்படி, அவரது பாராளுமன்ற உறுப்புரிமையும் இரத்தாகியுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனமொன்று வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியிருந்தார்.