அனைத்துவிதமான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கொள்கைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.