குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில நேற்று இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக மாத்தரம் பார்க்க முடியாது எனவும் தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் வெளி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.