யூத சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ஒன்பது நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து யூத எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஹமாஸுக்கு ஆதரவளிப்பது சட்ட விரோதமானது என்றும் இதனால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.