இஸ்ரேலிய டாங்கிகளை நோக்கி வடக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக எவ்வித தகவலையும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில், லெபனான் எல்லையில் உள்ள நகரமான மெடுலாவில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளவர்களை அங்கிருந்து செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டதை அடுத்து, மெட்டுலா இராணுவ வளையமாக அறிவிக்கப்பட்டது.