இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான மோதலால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக‘அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹர்ஷாத்‘ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” 400 பேர் வரை குறித்த நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காகச் சென்றுள்ளனர். தற்போது 120 இக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும், அவர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை நிறுத்தியுள்ளோம்.
அதேபோன்று, 6000 பணியாளர்களே சட்டரீதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றுள்ளனர். எனினும், 8000 பேர் வரை சட்டவிரோதமாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியுள்ளனர். எவ்வாறு இருப்பினும் இஸ்ரேலில் உள்ள எந்தவொரு இலங்கையரும் இதுவரை நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான போரில் நடுநிலை வகிப்பதே பொருத்தமானது.” இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவித்த அவர், அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளை இலங்கை தூதரகம் ஊடாக முன்னெடுத்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.