பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோர் நாட்டில் இல்லை என்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கான சேவை நீடிப்பு தொடர்பாக அரசியலமைப்பு சபைக்கும் நிர்வாகத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.