2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டியில் அப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக கிளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களையும் டாம் லாதம் 68 ஓட்டங்களையும் வில் ஜங் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அப்கானிஸ்தான் அணி சார்பாக அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதனை தொடர்ந்து 289 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆப்கானிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.