2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னையில் நேற்று ஆடவர் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை முதன்முறையாக வீழ்த்தி இந்த வெற்றியை தனதாக்கியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அணித்தலைவர் 74 பாபர் அசாம் ஓட்டங்களையும் அப்துல்லா ஷபீக் 58 ஓட்டங்களையும் ஷதாப் கான் மற்றும் இப்திகார் அஹமட் ஆகியோர் தலா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சுழற்பந்து வேசக்காளர் நூர் அஹமட் 3 விக்கெட்களையும் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக 38 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியிருந்தனர். இது உலகக்கிண்ண தொடரில் ஒரு இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களால் அதிக ஓவர்கள் வீசப்பட்ட சம்பவமாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில் 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49 ஆவது ஓவரில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
அவ்வணி சார்பாக இப்ராஹிம் சத்ரான் 87 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.