உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும், கட்டுப்பாட்டு விலை குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உர விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டதன் பின்னரே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, நவீன விவசாய தொழில்நுட்ப செயலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.