“வட மாகாணத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு தேவையான மணல் நியாயமான விலையிலும் தட்டுப்பாடின்றியும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும், அத்துடன் மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அடையாளப்படுத்தப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைத்து திணைக்களங்களும் வழங்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.