2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 69,231 டெங்கு நோயளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்; அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 39பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 1,453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.