சரியான நேரத்தில் களத்திற்கு வராததால் ஏஞ்சலோ மத்யூஸ், எவ்வித பந்துகளையும் எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஒரு விக்கெட் விழுந்த இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதே விதியாக உள்ளது.
மத்யூஸின் ஹெல்மெட்டில் ஏதோ தவறு இருப்பதால் சிறிது நேரம் தாமதமானது. இது குறித்து பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்திருந்தாலும், பட்டிங் நேரம் முடிந்துவிட்டது என்று அவர்கள் வாதிட்டனர்.
வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்த ஆட்டமிழப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்படி ஒரு ஆட்டமிழக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.