இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உடன்படிக்கையில் இஸ்ரேலின் உட்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த வாரம் இஸ்ரேலிய நிறுவனங்கள் விவசாயத் துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இப்புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த 4,500 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பராமரிப்புத் துறையில் பணிபுரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.