யூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் 2022 முழுவதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியளவிலான போராட்டமாக இது பதிவாகியுள்ளது.
பிரதமர் எலிசபெத் போர்ன், முன்னாள் ஜனாதிபதிகள் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பல இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தலைநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.