2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
வான்கடே மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய விராட் கோலி 117 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வேக்கபந்து வீச்சாளர் டிம் சவுத்தி 3 விக்கெட்களையும் டிரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனை தொடர்ந்து 398 ஓட்டங்களை எடுத்தால் என்ற வெற்றி இலக்கோடு நியூசிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.



















