2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை தாம் ஆதரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுட் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் மீனவர்களுக்கு நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை கூட்டமைப்பு வரவேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் உள்நாட்டுப் போர் இல்லாத நேரத்தில் கூட ஆயுதப் படைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கப்பட்டுள்ளதை தமிழ்த் கூட்டமைப்பு அங்கீகரிக்காது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.