காசா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு மத்தியில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய பிரதமரின் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கும் வகையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தடுக்காததற்காக நெதன்யாகு மற்றும் அவரது தலைமையின் கீழ் உள்ள பாதுகாப்பு எந்திரம் மன்னிக்க முடியாத அளவிற்கு செயற்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையை இழந்த ஒரு பிரதமரின் கீழ் ஒரு நீண்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே நெதன்யாகுவின் லிகுட் கட்சி மாற்று பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.