ஆர்.ஐ.டி.அலஸ் கல்வித்துறைக்கு முன்னோடியாக திகழ்ந்தார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்பாக எமக்கு முன்னுதாரணமாகவும் ஆசிரியராகவும் அறிமுகமாகிய ஆர்.ஐ.டி.அலஸ், கல்வித்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவரின் வழிகாட்டலின் கீழ் இந்நாட்டு பாடசாலைகள் முன்னுதாரணமாக பிரஜைகளை உருவாக்கும் மையமாக மாறின.
கல்வித்துறைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். ரோயல் கல்லூரியில் மாற்றத்தை ஏற்படுத்திய அலஸ் டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியையும் ஸ்தாபித்து மாணவர்களின் கல்விக்கு புதிய வழியை காட்டினார்.
கல்விக்கு மேலதிகமாக நிர்வாகம் தொடர்பிலான தெரிவையும் கொண்டிருந்தார். அவருடன் கல்வி மற்றும் மேலதிக செயற்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளோம்.
அவர் மாணவர் படைக்கு பொறுப்பாளராக இருந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக செயற்படும் வாய்ப்பு கிட்டியது.
அதன்போதான பயிற்சிகள் வாழ்க்கை வளப்படுத்துவதற்கான பயிற்சியாகவும், ஒழுக்கத்துக்கான வழிகாட்டலாகவும் அமைந்தன.
அவரால் ஆசிரியர் தொழிலுக்கு உரிய கௌரவமும் வழங்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.