4 வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (22) கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், இது தொடர்பான தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படம் என குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை இலவசமாக முன்பள்ளிக்கு அனுப்ப முடியாவிட்டால், அவர்களுக்கு அருகிலுள்ள முன்பள்ளியில் போதுமான இடம் கிடைக்கும் என்றும் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
200க்கும் குறைவான பிள்ளைகளுடன் 4,000 முன்பள்ளிகளும் 100க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 2,900 முன்பள்ளிகளும் நாடளாவிய ரீதியில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தரம் 10 இல் க.பொ.த. சாதாரணதர பரீட்சையை நடத்தவும் 17 வயதில் உயர்தர பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.