வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற, நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம்(24) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அலெக்ஸ் எனும் இளைஞனர் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.