சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகள் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது.
பெண் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டேனியல் மெக்கஹே இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் திருநங்கை ஆவார்.
29 வயதான அவர் செப்டம்பரில் பிரேசிலுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் கனடா அணி சபிர்கா அறிமுகமானார்.
இருப்பினும், ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, அவர் இனி சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.