கடந்த மூன்று வாரங்களாக வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் போக்கு குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
தற்போது கல்வி மற்றும் இதர விடயங்களுக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கல்விக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் இல்லாத நிலையும் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, விசேட பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் தற்போது பயிற்சிகளை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதாக தெரிவித்த செயலாளர், எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.