நாட்டில் 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் பதிவு செய்யப்படாதுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது,
ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், குறித்த வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் இதுவரையில் புதுப்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.