டுபாயில் இடம்பெறவுள்ள உலக பருவநிலை செயல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளார்.
ஏதிர்வரும் டிசம்பர் முதல் திகதி குறித்த பயணத்தை முன்னெடுக்கவுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் ஜயத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் டுபாய் செல்வவுள்ளதாக வெளியுறவு அமைச்சககம் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டுக்கு இடையில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பருவ நிலை சவால்களை ஒன்றிணைந்து சந்திக்க இந்த மாநாடு வாய்ப்பளிப்பதாகவும், ஜி 20 உச்சி மாநாட்டிலும் பருவநிலை பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது